Published : 30 Oct 2014 10:14 AM
Last Updated : 30 Oct 2014 10:14 AM
`கத்தி’ திரைப்படத்தால் நிம்மதி இழந்து தவிக்கிறார் கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர்.
தீபாவளி அன்று திரைக்கு வந்த, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான `கத்தி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை சமந்தா ஒரு அலைபேசி எண்ணை நடிகர் விஜய்யிடம் கூறுவார். அது ஒரு நகைச்சுவை காட்சியாக சித்தரிக் கப்பட்டிருக்கும்.
உண்மையில் அந்த அலைபேசி எண் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை அடுத்த குழிச்சலை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஷ் என்பவருடை யது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை ஆயிரக் கணக்கான அழைப்புகள் நடிகை சமந்தாவிடம் பேச வேண்டும், விஜய்யிடம் பேச வேண்டும் என வந்ததால் இப்போது மிகவும் தவித்து வருகிறார் ஜெகதீஷ்.
ஜெகதீஷின் எண்ணுக்கு நாம் தொடர்பு கொண்டபோது நமது அழைப்பு ஏற்கப்படவில்லை. அவரது சகோதரர் ஜெனீஷை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது:
’ஜெகதீஷின் அலைபேசியை எடுத்ததுமே முருகதாஸா? விஜய் அண்ணாவா? சமந்தாவா என்றுதான் கேட்கிறார்கள். ரசிகர்கள் அது வெறும் காட்சிக் காக பதிவு செய்யப்பட்ட எண் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நேற்று ஒரு மணி நேரத்தில் மட்டும் 156 அழைப்புகள் வந்தன. விஜய் ரசிகர்களால் என் சகோதரர் நிம்மதி இழந்துள்ளார்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT