Last Updated : 09 Oct, 2014 01:18 PM

 

Published : 09 Oct 2014 01:18 PM
Last Updated : 09 Oct 2014 01:18 PM

ட்விட்டரில் அஜித் - விஜய் ரசிகர்களிடம் சிக்கிய மனோபாலா

ட்விட்டர் தளத்தில் அஜித், விஜய் ரசிகர்களிடையே இடையே நடக்கும் 'கெத்து'ப் போரில் சிக்கித் தவித்திருக்கிறார் நடிகர் மனோபாலா.

சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்து விட்டு திரும்பி இருக்கிறார் நடிகர் மனோபாலா. ட்விட்டர் தளத்தில் எப்போதுமே தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வந்த மனோபாலா, அஜித்தின் சந்திப்பையும் பகிர்ந்தார்.

"இன்று அஜித்தை சந்தித்தேன். மிகவும் அமைதியான பணிவானவர், ஜெண்டில்மேன். எனது குடும்பத்தினர் பற்றி விசாரித்தார். ரொம்ப நாள் ஆயிடுச்சுல என்று கேட்டார். ஆமாம் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடன் நடிக்க விரும்புகிறேன். பார்க்கலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

அவரது பதிவினைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள், "உங்கக்கூட போட்டோ எடுத்திருப்பாரே.. இப்போ நீங்க அந்தப் போட்டோவைப் போடுவீங்களே", "உங்க கிட்டயும் அவரபத்தி ட்விட்டர்ல ட்வீட் போட சொல்லி கேட்டு இருப்பாரே" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்திற்குள் அஜித், விஜய் ரசிகர்களிடையே கருத்து மோதல்கள் தொடங்கின.

ரசிகர்களின் கருத்தைப் பார்த்த மனோபாலா, "அவர் சொல்லி நான் போடவில்லை. நானேதான் போடுகிறேன். உங்க ஆட்டத்திற்கு நான் வரவில்லை. விஜய் என் தம்பி. தயவுசெய்து பிரச்சினை ஆக்காதீர்கள்" என்று கூறினார். அதற்கு பிறகு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எதுவுமே பதிவு செய்யவில்லை.

அஜித் ரசிகர் ஒருவர், அஜித் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு, "ரொம்ப நல்லா இருக்கார்" என்று பதிலளித்துள்ளார். கால் ஆபரேஷன் குறித்து விசாரிக்கப்பட்டதற்கு, "ஷாலினி கர்ப்பமாக இருப்பதால், சிறிய காலத்திற்கு பிறகு செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x