Last Updated : 30 Oct, 2014 08:34 AM

 

Published : 30 Oct 2014 08:34 AM
Last Updated : 30 Oct 2014 08:34 AM

அஜித் படத்தலைப்பு என்னை அறிந்தால்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த பெயரிடப்படாத படத்திற்கு 'என்னை அறிந்தால்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.

படத்திற்கு பெயர் வைக்காமல், முதலில் படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று தீவிரம் காட்டினார்கள். தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு #WeWantTHALA55ForPongal2015 என்று ஹேஷ்டேக் ஒன்றிணை தயார் செய்து, இந்தியளவில் ட்ரெண்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக்கினால் மிகவும் சந்தோஷமடைந்த கெளதம் மேனன், விரைவில் படத்தலைப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அது போலவே, படத்தின் தலைப்பு அக்.30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது போலவே, சரியாக 12:00AM மணிக்கு படத்தின் தலைப்பு 'என்னை அறிந்தால்' என்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியானது முதல், #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் மற்றும் #Thala55 என்ற ஹேஷ்டேக் ஆகியவை இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x