Published : 20 Sep 2014 08:42 AM
Last Updated : 20 Sep 2014 08:42 AM
“திருமணம் ஆனது உண்மைதான் என்பதை சுஜிபாலா ஒப்புக்கொள்ள வேண்டும். என்னிடம் இருந்து வாங்கிய பணம், நகைகள், வீடு ஆகியவற்றை திருப்பித் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று இயக்குநர் ப.ரவிக்குமார் கூறியுள்ளார்.
‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், சுஜிபாலா. இவர் ‘உண்மை’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நடித்துவந்தார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
இருவருக்கும் திருமணம் நடந்தது உண்மை என்று ரவிக் குமார் கூற, அவர் பொய் சொல்வ தாகவும் தன் மீது ‘ஆசிட்’ வீசுவதாக கூறி மிரட்டுவதாகவும் சுஜிபாலா போலீஸில் புகார் அளித்தார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த ‘உண்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ப.ரவிக்குமார், தனக்கும் நடிகை சுஜிபாலாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை என்று கூறினார்..
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நான் திரையுலகுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏற்கனவே எனக்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். முதல் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்று 5 ஆண்டு கள் ஆகிறது.
இந்நிலையில் ‘உண்மை’ என்ற படத்தை எடுத்தபோது சுஜிபாலாவுடன் நட்பு ஏற்பட்டது. எனக்கு மணமாகி விவாகரத்து ஆன சூழலை அவரிடம் விளக்கினேன். என் மீது சுஜிபாலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரக்கம் ஏற்பட்டது. ‘உண்மை’ படத்துக்கு சம்பளமாக சுஜிபாலாவுக்கு 30 லட்சம் கொடுத்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் சுஜிபாலா என்னுடன் இருப்பார்.
சுஜிபாலா குடும்பத்தினர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத் தினர். சுஜிபாலாவுக்கு 87 லட்சத் தில் சொந்த வீடு கட்டிக் கொடுத்தேன். அந்த வீட்டில் எங்களு டைய நிச்சயதார்த்தம் நடந்தது. சுஜிபாலாவுக்கு 120 பவுன் நகை போட்டேன். விலை உயர்ந்த பட்டுப் புடவைகளையும் வாங்கிக் கொடுத்தேன். எட்டாமடை என்னும் ஊரில் தோட்டம் வாங்கிக்கொடுத் துள்ளேன். உறவினர்கள் முன் எங்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. தேனிலவுக்கு அந்தமான் சென்றோம். மகிழ்ச்சியாக இருந்த சூழலில்தான் திருமணத்துக்கு முன்பே சுஜிபாலாவுக்கு நிறைய காதலர்கள் இருந்தது எனக்கு தெரியவந்தது. திருமணத்துக்கு பின்னரும் புதுப்புது காதலர்களை அவர் தேடிக்கொண்டிருந்தார். சுஜிபாலா அவருடைய குடும்பத்தி னருடன் சேர்ந்து என்னுடைய எல்லா பணத்தையும் ஏமாற்றிவிட்டார். அவர் என்னைப் பற்றி தவறான புகார்களை பரப்பியதால் பெருமளவில் பாதிக்கப்பட் டுள்ளேன்.
எனக்கு வர வேண்டிய பணம் முடங்கியுள்ளதால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. என்னிடம் வாங்கிய நகை, பணம், தோட்டம், வீடு எல்லாவற்றையும் அவர் திருப்பித் தர வேண்டும். திருமணம் ஆனது உண்மைதான் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நடிகை சுஜிபாலாவை தொடர்பு கொண் டபோது அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT