Published : 20 Sep 2014 03:32 PM
Last Updated : 20 Sep 2014 03:32 PM
சிக்கிம்மில் படப்பிடிப்பிற்கு சென்ற போது விவேக்கிற்கு வாட்ச் பரிசு, கார் ஒட்டுநருக்கு புதிய செல்போன் என்று அஜித் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சிக்கிம்மில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அஜித் மற்றும் விவேக் விமானத்தில் சென்று இருக்கிறார்கள்.
'வாலி', 'கிரீடம்' படங்களின் போது உள்ள பழைய நிகழ்வுகளை பேசிக் கொண்டே சென்று இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனது கையில் இருந்த வெளிநாட்டு வாட்ச்சை கழற்றி, விவேக் கையில் மாட்டிவிட்டு இருக்கிறார். "உங்களுக்கு என்னுடைய அன்பு பரிசு" என்று கூறி இருக்கிறார் அஜித்.
விமான நிலையத்தில் இறங்கி, படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அஜித் மற்றும் விவேக் காரில் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது, காரின் ஒட்டுநர் ஒரு பழைய செல்போன் வைத்து பேசிக் கொண்டே வந்திருக்கிறார்.
வண்டியை ஒரு இடத்தில் நிப்பாட்டுங்க என்று கூறியுள்ளார் அஜித். பக்கத்தில் உள்ள செல்போன் கடைக்கு சென்று ஒரு புதிய செல்போனை வாங்கி, கார் ஒட்டுநருக்கு பரிசாக அளித்திருக்கிறார்.
பரிசளித்தது மட்டுமன்றி, இனிமேல் கார் ஒட்டும் போது ஹெட்போன் போட்டு தான் போன் பேச வேண்டும்... சரியா என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் அஜித்.
தனக்கு அளித்த பரிசு மட்டுமன்றி, ஒட்டுநருக்கு அளித்த பரிசையும் பார்த்து வாயடைத்து போய் விட்டாராம் விவேக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT