Published : 09 Sep 2014 05:07 PM
Last Updated : 09 Sep 2014 05:07 PM
'த்ரிஷ்யம்' படத்திற்காக நடிகைகள் மீனா மற்றும் ஸ்ரீப்ரியாவை லிங்கா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இதில் மோகன்லாலுக்கு மனைவியாக மீனா நடித்திருந்தார். விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றார். 'த்ரிஷ்யம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மீனாவே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். நாயகனாக வெங்கடேஷ் நடித்திருக்க, நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார்.
தெலுங்கு த்ரிஷ்யமும் ஹிட் ஆனது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி, மலையாளம் மற்றும் தெலுங்கு த்ரிஷ்யம் படங்களில் நடித்த மீனாவையும், தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியாவையும், லிங்கா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
லிங்கா கெட்டப்பில் இருந்த ரஜினியுடன் ஸ்ரீப்ரியாவும், மீனாவும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவரது உத்தரவையும் மீறி தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதற்கு முன் மீனா, ஸ்ரீப்ரியா இருவருமே ரஜினியுடன் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT