Published : 17 Nov 2025 12:09 PM
Last Updated : 17 Nov 2025 12:09 PM

ஏகன் ஜோடியாக 2 ஹீரோயின்கள்!

ஜியோ ஹாட்​ஸ்​டாரில் ஒளிபரப்​பான ‘கனா காணும் காலங்​கள்’ தொடர், ஹரிஹரன் ராம் இயக்​கிய ‘ஜோ’, சீனு ராம​சாமி இயக்​கிய ‘கோழிப்​பண்னை செல்​லதுரை’ ஆகிய திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மானவர் ஏகன்.

இவர் அடுத்து நடிக்​கும் படத்தை யுவ​ராஜ் சின்​ன​சாமி இயக்​கு​கிறார். இதை விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர் அருளானந்து மற்​றும் மேத்யூ அருளானந்து தயாரிக்​கின்​றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீதே​வி, மலை​யாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதா​நாயகி​களாக நடிக்​கின்​றனர்.

இந்​தப் படத்​தின் பூஜை சென்​னை​யில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். படத்​தின் தொழில்​நுட்​பக் குழு​வினர் பற்​றிய விவரங்​கள் விரை​வில் வெளி​யிடப்​பட இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x