Published : 13 Nov 2025 11:33 AM
Last Updated : 13 Nov 2025 11:33 AM

தயாரிப்பாளர் கொடுத்த எதிர்பாராத சம்பளம்: புகழ்கிறார் முனீஷ்காந்த்

கிஷோர் முத்​து​ராமலிங்​கம் இயக்​கத்​தில், முனீஷ்​காந்த், விஜயலட்​சுமி உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. மேலும் ராதா ரவி, காளி வெங்​கட், வேல ராமமூர்த்​தி, குரேஷி உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

ஆக்​ஸஸ் ஃபிலிம் ஃபேக்​டரி மற்​றும் குட் ஷோ தயாரித்​துள்ள இப்​படம் நவ. 21-ம் தேதி வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இசையமைப்​பாளர் சந்​தோஷ் நாராயணன், இயக்​குநர்​கள் சுப்​பிரமணிய சிவா, சுசீந்​திரன், சக்​திவேல், ஒப்​பிலி கிருஷ்ணா, ஏ.வெங்​கடேஷ், ரவிக்​கு​மார், விஷால் வெங்​கட், ராஜு முரு​கன், ஏ.ஆர்​.கே.சரவணன் என பலர் கலந்து கொண்​டனர்.

நடிகர் முனீஷ்​காந்த் பேசும்​போது, “இயக்​குநர் கிஷோர் என்​னிடம் நீங்​கள் தான் ஹீரோ என்​றார். நான் முடி​யாது என்​றேன். கதை கேட்​டபிறகு​ தான் தெரிந்​தது, கதை​தான் ஹீரோ என்​று. உடனே ஒப்​புக்​கொண்​டேன். இந்​தப் படத்​துக்கு நான் எதிர்​பா​ராத பெரிய சம்​பளத்தை மறைந்த தயாரிப்​பாளர் டில்லி பாபு சார் கொடுத்​தார். திறமை​களை மதித்து வளர்த்து விட்ட அவர் போன்ற பல தயாரிப்​பாளர்​கள் திரைத்​துறைக்​குத் தேவை” என்​றார்.

நடிகை விஜயலட்​சுமி பேசும்​போது, “இப்​படத்​தில் ரசித்து நடித்​தேன். இந்​தக் கதைக்கு முனீஷ்​காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடி​யும் எனத் தெரிய​வில்​லை. அவருடன் நடித்​தது மகிழ்ச்​சி. நாங்​கள் நினைத்​ததை விட படம்​ சிறப்​பாக வந்​திருக்​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x