Last Updated : 11 Nov, 2025 12:28 PM

2  

Published : 11 Nov 2025 12:28 PM
Last Updated : 11 Nov 2025 12:28 PM

குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

குரலற்றவர்களின் குரல் தான் ’மாஸ்க்’ திரைப்படம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

The Show Must Go On மற்றும் Black Madras Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாஸ்க்’. இப்படம் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது. விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “’மாஸ்க்’ படத்தில் புதிதாக ஒரு விஷயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட்ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில விஷயங்கள் மிகவும் பிடித்திருந்தது.

சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் ’மாஸ்க்’ ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ’ஸ்டார்’ படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜிவி இப்படத்தில் செய்த இசை மிக மிகக் கச்சிதமாக, அற்புதமாக இருந்தது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். இயக்குநர் நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார்.

சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். ’மாஸ்க்’ படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது.

ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார்.

படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விஷயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x