Published : 07 Nov 2025 12:34 PM
Last Updated : 07 Nov 2025 12:34 PM
ஒரு கதைக் களம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால், அதே களத்தில், அதேபோன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, ஆனால், வேறுவேறு கதைகளைப் படமாக்கும் போக்கு தென்னிந்திய வணிக சினிமாவுக்கு ஊக்கமூட்டியிருக்கிறது.
அப்படித்தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கும்கி 2’ திரைக்கு வருகிறது. இதிலும் ஒரு வெள்ளந்தி இளைஞனுக்கும் அவனுடைய யானைக்கும் இடையிலான அன்பு, அதைப் பங்குபோட வரும் ஒரு பெண், இந்த முக்கோணப் பிணைப்பைத் தகர்க்க வரும் வில்லன் என உருவாகியிருக்கிறது என்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரபு சாலமன்.

‘பைசன்’ பட வெற்றியால் வெளிச்சம் பெற்றிருக்கும் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை. இயற்கையை அள்ளிக்கொண்டுவரும் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு எனக் கவனம் பெற்றுள்ள இப்படத்தில், மதி என்பவர் அறிமுக நாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு இணை ஸ்ரீதா. ஜெயந்திலால் காடா, தவல் காடா இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT