Published : 04 Nov 2025 10:17 PM
Last Updated : 04 Nov 2025 10:17 PM
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது.
சுதா கொங்காரா இயக்கி வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ என்ற பாடலை வரும் வியாழக்கிழமை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்பாடல் வெளியாக உள்ளது. இதனை ஷான் ரோல்டன் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். தெலுங்கில் எல்.வி.ரேவந்த், தீ பாடியுள்ளனர். இது தொடர்பாக சிறிய ப்ரோமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விண்டேஜ் பின்னணியில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா டூயட் பாடுவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.
Tape recorder feels. Timeless vibes #Parasakthi first single Adi Alaye (Tamil) out this Thursday
A @gvprakash musical.
Sung by Dhee and Sean Roldan.
Link - https://t.co/1tDmAVOXay#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara… pic.twitter.com/mfkQC0OHul— DawnPictures (@DawnPicturesOff) November 4, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT