Published : 02 Nov 2025 01:44 PM
Last Updated : 02 Nov 2025 01:44 PM

வீட்​டுக்​குத் தெரி​யாமல் ‘தாரணி’ படத்தை இயக்கிய இயக்​குநர்!

அறி​முக இயக்​குநர் ஆனந்த் இயக்​கத்​தில், மாரி நாயக​னாக​வும் அபர்​ணா, விமலா நாயகி​களாக​வும் நடித்​துள்ள படம்​, ‘​தா​ரணி’. மனோன்​மணி கிரியேஷன்ஸ் சார்​பில் பி லலிதா தயாரித்​துள்ள இதில், ஆனந்த், இலக்​கி​யா, இம்​ரான், சசி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். காயத்ரி குரு​நாத் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு வெங்​கடேஷ் மாவேரிக்’ ஒளிப்​ப​திவு செய்​திருக்​கிறார்.

படம் பற்றி இயக்​குநர் ஆனந்த் பேசும்​போது, “பு​தி​ய​வர்களை வைத்து இப்​படத்தை உரு​வாக்கி இருக்​கிறோம். நான்கு மாதம் முன்பு வரை நான் இப்​படி ஒரு படம் இயக்​கிக் கொண்​டிருக்​கிறேன் என்​பது என் வீட்​டுக்கே தெரி​யாது. ஆபீஸ் போவ​தாகப் பொய் சொல்லி விட்டு திரைப்​படத்​துக்​காகச் சுற்​றினேன். ஒரு இக்​கட்​டான சூழ்​நிலை​யில் தான் இந்த விஷயமே வீட்​டுக்​குத் தெரிய​வந்​தது.

சினிமா துறை​யில் மேலே வர ஒரு பெண் எவ்​வளவு கஷ்டப்பட வேண்​டி​யிருக்​கிறது, திரை​யுல​கில் உள்ள சில​ரால் அவள் எவ்வளவு பாதிக்​கப்​படு​கிறாள் என்​பது​தான் இப்படத்தின் கதை.ரசிகர்​களுக்கு பிடிக்​கும் வித​மாக இப்​படம் இருக்​கும். இதையடுத்து, ‘என் திரை’ என்ற படத்தை இயக்குகிறேன்’’ என்றார். படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x