Published : 01 Nov 2025 10:13 PM
Last Updated : 01 Nov 2025 10:13 PM
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘டிசி’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் இந்தி நடிகை வாமிகா நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.
இந்த நிலையில் இப்படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரத்தம் தோய்ந்த முகத்துடன் லோகேஷ் காணப்படுகிறது. வாமிகாவும் இதில் இடம்பெற்றுள்ளார். தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் லோகேஷும், சந்திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகாவும் நடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அருண் மாதேஸ்வரன் படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்கவில்லை என்பதால், லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Sun Pictures proudly presents #DC starring @Dir_Lokesh & #WamiqaGabbi
Directed by @ArunMatheswaran
An @anirudhofficial musical
https://t.co/khNJS6e8UH@mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah @frankjacobbbb #RamKumar #Heisenberg pic.twitter.com/10AD9dpQhR— Sun Pictures (@sunpictures) November 1, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT