Published : 01 Nov 2025 01:41 PM
Last Updated : 01 Nov 2025 01:41 PM

பூமணி​யின் ‘கசிவு’ கதையை திரைப்படமாக்​கியது ஏன்? - இயக்குநர் வரதன் செண்பகவல்லி விளக்கம்

எழுத்​தாளர் பூமணி​யின் நாவலை மைய​மாக வைத்து உரு​வாகி​யுள்ள திரைப்​படம்​,‘கசிவு’. எம்​.எஸ்.பாஸ்​கர் கதை​யின் நாயக​னாக நடித்​துள்ள இதில், விஜயலட்​சுமி, ஹலோ கந்​த​சாமி முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். வரதன் செண்​பகவல்லி இயக்​கி​யுள்ள இப்​படத்தை வெற்​றிச்​செல்​வன் தயாரித்​துள்​ளார்.

ஓடிடி பிளஸ் தளத்​தில் வெளி​யாகி​யுள்ள இப்​படம் பற்றி இயக்​குநர் வரதன் செண்​பகவல்லி கூறிய​தாவது: நான் கமர்​ஷியல் கதையை இயக்​கலாம் என்று அதற்​கான முயற்​சி​யில் இருந்​த​போது, எழுத்​தாளர் பூமணி​யைச் சந்​தித்​தேன். அவர் என்​னிடம் 3 சிறுகதைகளைக் கொடுத்​தார். அதை ஆந்​தாலஜி படமாக இயக்​கலாம் என்று சொன்​னார். அது சரி வராத தால் அந்த மூன்​றி​லிருந்து ‘கசிவு’ நாவலைத் தேர்ந்தெடுத்​து, அதை மட்​டும் திரைப்​பட​மாக இயக்க முடிவு செய்​தோம். அப்​படித்​தான் இப்​படம் உரு​வானது. இந்​தக் கதை​யில் வரும் பொன்​னாண்டி கதா​பாத்​திரத்​துக்கு நான் எம்​.எஸ்​.​பாஸ்​கரைத்​தான் யோசித்​தேன். அவரையே​தான் பூமணியும் யோசித்து வைத்​திருந்​தார்.

இந்​தப் படத்தை ஏழு நாளில் எடுத்து முடித்​தோம். நாவலைப் படம் பண்​ணும்​போது கதை​யில் சின்ன சின்ன மாற்​றங்​கள் தேவை. அதை செய்​தோம். அடுத்​தும் பூமணி​யின் சிறுகதையை இயக்க இருக்கிறேன். இது பீரியட் கதை. அழுத்​த​மான கதை​யாக​வும்​ சொல்​லப்​பட வேண்​டிய கதை​யாக​வும்​ இருக்​கும்​” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x