Published : 01 Nov 2025 01:42 PM
Last Updated : 01 Nov 2025 01:42 PM

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தில் கிராமத்து காதல் கதை!

அறி​முக இயக்​குநர் எஸ்​.ஜெ.என்​.அலெக்ஸ் பாண்​டியன் இயக்​கி​யுள்ள படம், ‘கிறிஸ்​டினா கதிர்​வேலன்’. கவுஷிக் ராம், பிர​தி​பா, சிங்​கம் புலி, கஞ்சா கருப்​பு, ஜெயக்​கு​மார் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். ஸ்ரீ லட்​சுமி ட்ரீம் ஃபேக்​டரி சார்​பில் டாக்​டர் ஆர். பிரபாகர் ஸ்த​பதி தயாரித்​துள்ள இப்​படத்தை மிஸ்​டர் டெல்டா கிரியேஷன்ஸ் சார்​பில் கார்த்​திக் வீரப்​பன் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். என்​.ஆர்.ரகுநந்​தன் இசை அமைத்​துள்​ளார்.

பிரஹத் முனிய​சாமி ஒளிப்​ப​திவு செய்​திருக்​கிறார். நவ. 7-ல் வெளி​யாகும் இப்​படத்தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. நடிகர் கவுஷிக் ராம் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் பணி​யாற்​றிய அனுபவம் சுவாரஸிய​மான​தாக இருந்​தது.‌ கும்​பகோணத்​தில் தங்கி அங்​குள்ள மக்​களு​டன் பழகி நடித்​தேன். இந்​தப் படத்​தில் லேயர் லேய​ராக பணி​யாற்றி இருக்​கிறோம்.‌ இது கிராமத்​துக் காதல் கதை. அதி​லும் ஒருதலைக் காதல் கதை.

ஒரு காதலன் தன் காதலைச் சொல்​வதற்கு எப்​படி தவிக்​கிறான், எப்​படி அதைத் தனக்​குள்​ளேயே வைத்​துக் கொள்​கிறான்? என்​பதை இந்​தப் படத்​தில் இயக்​குநர் காட்​சிப்​படுத்தி இருக்​கிறார். அதோடு சமூகத்​துக்​குத் தேவை​யான சில விஷ​யங்​களை​யும் சொல்லி இருக்​கிறார். அதனால் இந்​தப் படம் அனை​வருக்​கும் பிடிக்​கும்” என்​றார். படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் எஸ்​.ஆர்​. பிர​பாகரன், விஜய்​ , மைக்​கேல்​ கே.​ராஜா உள்​பட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x