Published : 01 Nov 2025 11:45 AM
Last Updated : 01 Nov 2025 11:45 AM
‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் ஹீரோவானார். பின்னர் ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்தப் பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “ஆரவ் ஸ்டூடியோஸ்” தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இது, கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. இதயங்களைத் தொடும் சிறந்த படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தைப் பெருமையுடன் தொடங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT