Published : 26 Oct 2025 07:25 AM
Last Updated : 26 Oct 2025 07:25 AM
சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கவுதமி உள்பட பலர் நடித்த படம், ‘தேவர் மகன்’. பரதன் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு அக்.25-ல் தீபாவளிக்கு வெளியான இப்படம் வெற்றி பெற்றது. 5 தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம் அப்போது இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டது.
‘தேவர் மகன்’ வெளியாகி நேற்றோடு 33 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. “என் குழந்தைக்கு வயது 33. அதை உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நான்” என கமல்ஹாசன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT