Published : 22 Oct 2025 06:53 AM
Last Updated : 22 Oct 2025 06:53 AM

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி: புகைப்படங்கள் வைரல்

நடிகர் ரஜினி​காந்த் தனது குடும்​பத்​தினருடன் தீபாவளியைக் கொண்​டாடி உள்​ளார். அந்த புகைப்படங்கள் தற்​போது இணை​யத்​தில் பரவி வரு​கின்​றன. தீபாவளி பண்​டிகை நேற்று முன் தினம் உற்​சாகத்​துடன் கொண்​டாடப்​பட்​டது.

திரைபிரபலங்​களும் தீபாவளியை குடும்​பத்​துடன் கொண்​டாடி​யுள்​ளனர். நடிகர் ரஜினி​காந்த் தனது போயஸ் கார்​டன் இல்​லத்​தில் குடும்​பத்​துடன் தீபாவளியை கொண்​டாடி​யுள்​ளார். இந்​தப் புகைப்​படங்​களை சவுந்​தர்யா ரஜினி​காந்த் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

ஒவ்​வொரு ஆண்​டும் புத்​தாண்​டு, தீபாவளி, பொங்​கல் பண்​டிகைகளுக்கு தன்​னுடைய ரசிகர்​களைச் சந்​தித்து வாழ்த்து சொல்​வதை வழக்​க​மாக வைத்​துள்​ளார், ரஜினி​காந்த். அதன்​படி தீபாவளியை முன்​னிட்டு ஏராள​மான ரசிகர்​கள் அவர் வீட்​டின் முன் கூடினர்.

வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்​களைப் பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். ரசிகர்​களின் வாழ்த்​துகளை​யும் ஏற்​றுக்​கொண்​டார். தீபாவளியை முன்​னிட்டு, ரஜினி நடித்து வரும் ‘ஜெ​யிலர் 2’ படத்​தின்​ ப்​ரமோ மேக்​கிங்​ வீடியோவை சன்​ பிக்​சர்​ஸ்​ வெளி​யிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x