Published : 19 Oct 2025 01:15 PM
Last Updated : 19 Oct 2025 01:15 PM

தற்கொலையை தடுக்கும் பேஸ்புக் ‘மெஸன்ஜர்’!

ஸ்ரீ​ராம் கார்த்​திக் ஹீரோவாக நடித்​துள்ள படம், ‘மெஸன்​ஜர்’. மனீஷா ஜஸ்​னானி, ஃபாத்​திமா நஹீம், வைசாலி ரவிச்​சந்​திரன், லிவிங்​ஸ்​டன், பிரியதர்​ஷினி ராஜ்கு​மார், ஜீவா ரவி உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். பி.​வி.கே ஃபிலிம் ஃபேக்​டரி சார்​பில் பா.​விஜயன் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தின் கதை, திரைக்​கதை எழுதி இயக்கி இருக்​கிறார் ரமேஷ் இலங்​காமணி. பால கணேசன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப் படத்​துக்கு அபு பக்​கர் இசையமைத்​துள்​ளார்.

இதன் டிரெய்​லர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்ள நிலை​யில் இயக்​குநர் ரமேஷ் இலங்​காமணி கூறும்​போது, “ இது காதல் ஃபேன்​டஸி படம். காதல் தோல்வி காரண​மாக நாயகன் ஸ்ரீராம் கார்த்​திக் தற்​கொலைக்கு முயற்​சிக்​கிறார். அவரது முகநூல் மெஸன்​ஜரில் ஒரு பெண் தகவல் அனுப்பி அதை தடுக்​கிறார். தான் தற்​கொலை செய்​யப் போவது அவளுக்கு எப்​படித் தெரி​யும்?

அந்​தப் பெண் யார்? என்று தேடு​கிறார் நாயகன். பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை. காதல் கதை என்​றாலும் இது​வரை பார்த்​தி​ராத ஒன்​றாக இருக்​கும். பேஸ்​புக் மெஸன்​ஜ​ரால் வாழ்​வில் ஏற்​படும் மாற்​றங்​களைச் சுவாரஸ்​ய​மாகச் சொல்​லும் படமாக இது உரு​வாகி இருக்​கிறது. சென்னை மற்​றும் விக்​கிர​வாண்டி அரு​கிலுள்ள புதுப்​பாளை​யம் பகு​தி​களில் படப்​பிடிப்பு நடந்​துள்​ளது. அக்டோபர் 31-ம் தேதி வெளி​யாகிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x