Published : 07 Oct 2025 05:06 PM
Last Updated : 07 Oct 2025 05:06 PM
சென்னை: நடிகர் அஜித் குமார் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ள நிலையில், அஜித் குமாருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்தில் தொடந்து ஆர்வம் காட்டி வருகிறார் அஜித் குமார். சமீபத்தில் கூட, ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT