Published : 02 Oct 2025 08:57 PM
Last Updated : 02 Oct 2025 08:57 PM
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. தற்போது விஜய தசமியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பெரும் பொருட்செலவில் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘மூக்குத்தி அம்மன் 2’ தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் கூறும்போது, “‘மூக்குத்தி அம்மன்’ ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளிதான் இந்த ஃபர்ஸ்ட் லுக்.
தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT