Published : 26 Sep 2025 01:13 AM
Last Updated : 26 Sep 2025 01:13 AM
கலைமாமணி விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அனிருத், ”மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதை விட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது” என்று தெரிவித்துள்ளார் அனிருத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT