Published : 11 Sep 2025 07:49 AM
Last Updated : 11 Sep 2025 07:49 AM
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன் என பலர் நடித்த படம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது. ரதன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை பிவிஆர் சினிமாஸ் ‘செப். 19-ம் தேதி மீண்டும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT