Last Updated : 08 Sep, 2025 11:09 PM

2  

Published : 08 Sep 2025 11:09 PM
Last Updated : 08 Sep 2025 11:09 PM

“புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” - முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “பிறக்காத என் குழந்தைக்கு நீதி வேண்டும். அப்பா ஸ்டாலின் அவர்களே, சென்னை காவல் ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கினார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.நிறைமாதத்தை எட்டும் நிலையிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி ட்ரீட்மென்ட் அளிக்கப்படுகிறது. மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.

அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற அதிர்ஷ்டம் இல்லாத பெண்கள் நம்புகிறார்கள். இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன். எந்தவொரு விஐபியும், பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? என் பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.

சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகைப்படத்துடன் அறிவித்தார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறி ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையரகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x