Published : 31 Aug 2025 01:32 PM
Last Updated : 31 Aug 2025 01:32 PM
ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
எம்.ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி. சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. யுவன் இசையில் பாடல்கள் இன்று வரை பிரபலமாக உள்ளன.
தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் - ஜீவா - யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தற்போது ஜீவா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே, இப்படமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
Years an Iconic Trio and another Timeless Film
— Jiiva (@JiivaOfficial) August 31, 2025
On this special U1 day, @malikstreams happily announces their next mega project featuring @jiivaofficial
Directed by @rajeshmdirector & music by @thisisysr @S2MediaOfficial @prosathish #Jiiva47withRajeshm… pic.twitter.com/68Re4oOYNf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT