Published : 27 Aug 2025 10:11 PM
Last Updated : 27 Aug 2025 10:11 PM
தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘’டிக் டிக் டிக்’, ‘திமுரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு தவிர்த்து விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதே போல ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா. மேலும் அதில் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிவேதாவின் காதலரின் பெயர் ரஜித் இப்ராம். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இருவரும் அது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT