Published : 27 Aug 2025 05:00 PM
Last Updated : 27 Aug 2025 05:00 PM
மோகன்.ஜி இயக்கி வரும் ‘திரெளபதி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து மோகன்.ஜி தயாரித்து வரும் படம் ‘திரெளபதி 2’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ‘திரெளபதி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.
இப்படத்தில் நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராம மூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு எழுத்தாளர் பத்மா சந்திர சேகர், மோகன்.ஜி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிலிப் ஆர்.சுந்தர், இசை அமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 14-ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் முகலாயர்கள் கால் பதிக்கும் காலத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை தலைநகரமாக கொண்டு தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த ரத்த சரித்திரமாக ’திரெளபதி 2’ உருவாகி வருகிறது. இதன் 75% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
2020-ம் ஆண்டு வெளியான ’திரெளபதி’ படத்துடன் இந்த வரலாற்றை எப்படி தொடர்பு படுத்தி 2-ம் பாகம் உருவானது என்பது பேசு பொருளாகும். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
#Draupathi2 First look is here
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT