Published : 26 Aug 2025 01:26 PM
Last Updated : 26 Aug 2025 01:26 PM
தனக்கு ‘3பிஹெச்கே’ படம் பிடித்திருந்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதை ஒட்டி அந்தப் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின் “நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்தப் படங்கள் ’3பிஹெச்கே’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’” என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பதிலால் ‘3 பிஹெச்கே’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “பலமுறை டைப் செய்து, என்ன வார்த்தைகளால் விவரிப்பது என்று தெரியவில்லை. சில வார்த்தைகளை கண்டுபிடித்து பின்பு சொல்கிறேன். ஏனென்றால் நான் இப்போது என் கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘3பிஹெச்கே’. அம்ரித் ராம்நாத் இசையமைப்பில் உருவான இப்படத்தினை அருண் விஸ்வா தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Typed so many times but still not able to find words to express!
— arun Viswa (@iamarunviswa) August 25, 2025
I will find some n then react!!!!!!
Coz I just saw something which is beyond my wildest imagination! pic.twitter.com/pNSjD4h1TN
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT