Published : 26 Aug 2025 08:08 AM
Last Updated : 26 Aug 2025 08:08 AM

கேஜிஎஃப் நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்

பிரபல கன்னட நடிகரும் கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு (வயது 63) உடல் நலக்குறைவால் காலமானார்.

யாஷின் ‘கேஜிஎஃப்’ படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் பிரபலமான தினேஷ் மங்களூரு, கிச்சா, கிரிக் பார்ட்டி, ரிக்கி உள்பட பல கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன் பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இவர், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உடுப்பி மாவட்டம் குண்டப்புராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை காலமானார். பின்னர் அவர் உடல் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டது. அவர் மறைவுக்கு ஏராளமான கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த தினேஷ் மங்களூருவுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x