Published : 24 Aug 2025 04:29 PM
Last Updated : 24 Aug 2025 04:29 PM
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பிட்டுள்ளனர்.
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி ஒன்றிணை படமாக்கி வருகிறார்கள். தற்போது இப்படத்துக்கு ’மகுடம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. தற்போது இப்படத்தின் அறிமுக வீடியோவுடன் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் இது. இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 99-வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Here we go. It’s time to reveal the TITLE of my next film. Presenting to all you darlings all over the world The official #TitleTeaser of #Vishal35 & #SGF99 hope u all enjoy it. God bless#MAGUDAM #மகுடம் ⚓
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT