Published : 24 Aug 2025 03:18 PM
Last Updated : 24 Aug 2025 03:18 PM
உலகளாவிய வசூலில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 25-ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. முழுக்க கணவன் – மனைவி உறவினை மையப்படுத்தி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதனால் ஓடிடி வெளியீட்டுக்கு பின்னரும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சில வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்தார் பாண்டிராஜ். அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பிய படம் ‘தலைவன் தலைவி’. மேலும், விஜய் சேதுபதிக்கும் ‘மகாராஜா’ படத்துக்குப் பின் வெற்றியைப் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியினால் பாண்டிராஜ் – விஜய் சேதுபதி இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.
Families’ favourite #ThalaivanThalaivii marks 100 CR worldwide gross with your endless love & support
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT