Published : 22 Aug 2025 01:48 PM
Last Updated : 22 Aug 2025 01:48 PM
கார்த்திக்கு வில்லனாக நிவின் பாலிக்கு பதில் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘சர்தார் 2’ படத்துக்குப் பிறகு ‘மார்ஷல்’ படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. இதில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கவிருந்தார். ஆனால், தேதிகள் பிரச்சினையால் விலகவே தற்போது ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.
’டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படம் ‘மார்ஷல்’. இதில் கார்த்தி, கல்யாணி ப்ரியதர்ஷன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். முழுக்க ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கவுள்ளனர்.
‘மார்ஷல்’ படத்தில் நடிப்பதற்காக தனது உடலமைப்பை மாற்றி வருகிறார் கார்த்தி. தற்போது ராமேஸ்வரத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க ஒட்டுமொத்த படக்குழுவும் ராமேஸ்வரத்துக்கு பயணிக்கவுள்ளார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT