Published : 21 Aug 2025 09:18 AM
Last Updated : 21 Aug 2025 09:18 AM
நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT