Published : 16 Aug 2025 06:47 PM
Last Updated : 16 Aug 2025 06:47 PM
ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதைப் பற்றி கவலைப்படாமல் படத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 2 நாட்களில் ரூ.270 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “‘கூலி’ பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியிருக்கிறார். ரஜினி சார் எப்போதும் போலவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கேற்ப ஆச்சரியப்படுத்துகிறார். அனிருத்தின் இசை படம் முழுக்கவே ஓர் அற்புத அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
அதிக வன்முறை உள்ள பிறமொழிப் படங்களுக்கு U/A சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால், ‘கூலி’ படத்துக்கு மட்டும் ‘ஏ’ சான்றிதழ். இப்படத்துக்கு அது தேவையில்லாத ஒன்று. இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. தமிழ் திரையுலகம் இப்போது ஒன்றிணைய வேண்டிய நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் மட்டுமன்றி இணையத்தில் பலரும் ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் குழந்தைகளை அனுமதிக்கவில்லை. இதனால், சில இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Watched #Coolie @Dir_Lokesh fantastic work. #Rajini sir amazes me,Superstar is always a Superstar! @anirudhofficial elevates the film to another level. Other language films with more violence get U/A, yet #Coolie gets an A? This film didn’t deserve that. Something fuzzy ,Tamil…
— Red (@elredkumar) August 15, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT