Last Updated : 16 Aug, 2025 05:35 PM

 

Published : 16 Aug 2025 05:35 PM
Last Updated : 16 Aug 2025 05:35 PM

‘இட்லி கடை’ அப்டேட்: சிறப்புத் தோற்றத்தில் பார்த்திபன்!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்த்திபன் உறுதி செய்திருக்கிறார்.

தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சாலையோரத்தில் இருக்கும் இட்லி கடைகள் பலவற்றில் ‘இட்லி கடை’ படத்தின் விளம்பரத்தை இடம்பெற செய்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

இது தொடர்பாக பார்த்திபன், “இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கவுரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.

நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே) அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!!” என்று தெரிவித்துள்ளார்.

நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் தனுஷ் உடன் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x