Published : 30 Jul 2025 11:16 AM
Last Updated : 30 Jul 2025 11:16 AM
கமல் குறித்து பேசியது வைரலானதைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்ற போது நீங்கள் தங்கை மாதிரி என்று சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதை வைத்து பலரும் செய்திகள் வெளியிட்டார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வைரலாக பரவியது.
இந்தப் பேச்சு தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42-வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 45-வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன்.
அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக்கு வித் கோமாளியில் நன்றாக ரசித்துப் பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட” என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில்… pic.twitter.com/UWlk9k8X70
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 29, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT