Last Updated : 27 Jul, 2025 11:26 PM

 

Published : 27 Jul 2025 11:26 PM
Last Updated : 27 Jul 2025 11:26 PM

தீர்ந்த சிக்கல்கள் - ‘அடங்காதே’ 8 ஆண்டுக்குப் பின் ஆக.27-ல் ரிலீஸ்!

அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி ‘அடங்காதே’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான படம் ‘அடங்காதே’. பல்வேறு பிரச்சினைகளால் இப்படம் கடந்த 8 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, இ5 நிறுவனம் உலகமெங்கும் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது ஆகஸ்ட் 27-ம் தேதி ‘அடங்காதே’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இப்படம் தணிக்கையில் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது. பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி இறுதியாக யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்ரீக்ரீன் நிறுவனம் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x