Published : 24 Jul 2025 06:37 PM
Last Updated : 24 Jul 2025 06:37 PM
மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், படக்குழுவினரைப் பாராட்டவும் வைத்தது. இந்த மகிழ்ச்சியான படைப்புக்காக படக்குழுவினரை வாழ்த்த அவர்களுடன் ஓர் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன்.
இப்படத்தின் நகைச்சுவையின் கீழ் மனித உணர்வுகள் மீது சமூக உணர்வுள்ள பார்வையும், நமது சமூகத்தின் இருண்ட நிழல்கள் மீதான கூர்மையான பார்வையும் உள்ளது. பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு வகையான புதுமையான, உற்சாகமான சினிமா” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் பாராட்டு படக்குழுவினரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாரீசன்’. சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இதன் இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்துள்ளார்.
Watched Maareesan - a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.
— Kamal Haasan (@ikamalhaasan) July 24, 2025
Beneath its humour lies a socially conscious lens on…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT