Published : 16 Jul 2025 05:02 PM
Last Updated : 16 Jul 2025 05:02 PM
‘96’, ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார்.
‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். இந்த இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘96’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பிரேம்குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் உடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், படப்பிடிப்பையும் உடனடியாக தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இது விக்ரம் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். முன்னதாக 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. அதேபோல் ‘96’ 2-ம் பாகத்தினையும் விக்ரம் நடிக்கும் படத்தினை முடித்துவிட்டு தான் பிரேம்குமார் இயக்குவார் என தெரிகிறது.
A collaboration that promises magic on screen
— Vels Film International (@VelsFilmIntl) July 16, 2025
We at @VelsFilmIntl are proud to present our next prestigious venture #Chiyaan64, starring the phenomenal @chiyaan and directed by the visionary #PremKumar @IshariKGanesh @kushmithaganesh@Nitinsathyaa @sooriaruna… pic.twitter.com/imWGOoV57U
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT