Published : 08 Jul 2025 08:08 PM
Last Updated : 08 Jul 2025 08:08 PM
‘கோர்ட்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இதில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருந்தார்கள். தற்போது இவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கே.ஜே.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். இதனை 'விலங்கு' வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தான் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஸ்ரீதேவி.
மேலும், இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி, அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் , அஜூ வர்கீஸ் , ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘அங்கீகாரம்’ என்னும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் கே.ஜே.ஆர். அதனைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது.
Up next, with gratitude to the universe.
Thank you @vinod_offl and @ministudiosllp for your trust and this incredible opportunity.#ArjunAshokan #SrideviApalla #HarishKumar @AjuVarghesee @Abishek_jg @ashwin_kkumar @REGANSTANISLAUS @GhibranVaibodha @pvshankar_pv @PeterHeinOffl pic.twitter.com/k4WiWgMcaC— KJR (@KJRuniverse) July 7, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT