Published : 05 Jul 2025 03:21 PM
Last Updated : 05 Jul 2025 03:21 PM
‘கரெக்டடு மச்சி’ (Corrected Machi) என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி என்பதால், அவரது அடுத்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், அவரோ நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகனாக அபிஷன் ஜீவிந்த் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்க அனஸ்வர ராஜன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ‘கரெக்டடு மச்சி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி, பலரும் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT