Published : 05 Jul 2025 07:44 AM
Last Updated : 05 Jul 2025 07:44 AM
அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரையில் உள்ள திரையரங்கங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது.
சென்னையில் நாங்கள் குழுவாகத் திரையரங்கத்துக்குச் சென்ற போது ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படத்தைப் பார்த்துவிட்டு, சண்டைக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறாய் என அப்பா பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்தப் படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பைச் சம்பாதித்து இருக்கிறேன்.
‘இறுகப்பற்று' படத்தைப் பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT