Last Updated : 03 Jul, 2025 01:19 PM

 

Published : 03 Jul 2025 01:19 PM
Last Updated : 03 Jul 2025 01:19 PM

செல்வராகவனின் புதிய படம் தொடக்கம்

செல்வராகவன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம் ஒன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை விஜயா சதீஷ் வழங்க, ‘Vyom என்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, கெளசல்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மா, எடிட்டராக தீப், இசையமைப்பாளராக ஏ.கே.பிரியன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் துவங்குகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x