Published : 30 Jun 2025 10:07 PM
Last Updated : 30 Jun 2025 10:07 PM
விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா நாயகனாக அறிமுகம் ஆகும் படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது கஷ்டப்படுகிறவர்கள் வீட்டுக்கே சென்று உதவிகள் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தற்போது சினிமாவில் ஹீரோவாக பாலா அறிமுகம் ஆகிறார். பாலா நாயகனாக நடிக்கும் படத்தினை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிக்கிறார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
It’s time. The mirror turns. The name is revealed.
— TrendMusic (@trendmusicsouth) June 30, 2025
Here’s the Title Reveal Glimpse of our upcoming film #GandhiKannadi .https://t.co/voMTOJXIGf
Written and Directed by : @SheriefDirector
Produced by : @JayiKiran pic.twitter.com/6Y3O9Zgg2r
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT