Published : 28 Jun 2025 06:42 PM
Last Updated : 28 Jun 2025 06:42 PM
‘ஃபீனிக்ஸ்’ பிடிக்கவில்லை என்றால் என்னை திட்டுங்கள் என்று தயாரிப்பாளர் சிவா பேசியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஃபீனிக்ஸ்’. அனல் அரசு இயக்கி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, “‘ஃபீனிக்ஸ்’ முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் ‘ஃபீனிக்ஸ்’ நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள்.
படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதை அனல் அரசு நிச்சயம் பெறுவார். சூர்யாவுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராபாக நிச்சயம் சூர்யா வருவார்.
தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் ‘மகாராஜா’. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக ‘ஃபீனிக்ஸ்’ இருக்கும். சாம் சிஎஸ் இந்த படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார். தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி. அவரை தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பேசினார் டி.சிவா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT