Published : 28 Jun 2025 11:35 AM
Last Updated : 28 Jun 2025 11:35 AM

பாலு மகேந்திராவின் ‘வீடு’ போல 3 பிஹெச்கே படம் அமையும்: ரவி மோகன் கணிப்பு

ஸ்ரீ கணேஷ் இயக்​கும் படம், ‘3 பிஹெச்​கே’. சித்​தார்த் ஹீரோ​வாக நடிக்​கும் இதில், சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, “இந்​தப் படத்​தைப் பார்த்​து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்​ததோ, அது​போல இந்​தப் படமும் அமை​யும். நானும் சித்​தார்த்​தும் ஒன்​றாக வளர்ந்​தோம். சித்​தார்த், எப்​போதும் தப்​பான படங்​கள் செய்​த​தில்​லை. இனி​யும் அப்​படித்​தான் இருப்​பார்.

அவருக்கு வாழ்த்​துகள். நான் பிறந்​த​தில் இருந்தே வாடகை வீட்​டில் இருந்​தது இல்​லை. சொந்த வீட்​டில்​தான் இருந்​திருக்​கிறேன். இப்​போது வாடகை வீட்​டில் இருப்​ப​தால் என்​னால் இந்​தக் கதையை தொடர்​புப் படுத்​திக் கொள்ள முடிந்​தது. நல்ல கதைகளை​யும் படங்​களை​யும் பார்க்க விரும்​புவர் களுக்​கான சிறந்த படமாக இது இருக்​கும்” என்​றார். இயக்​குநர்​கள் ராம், மடோன் அஸ்​வின், அஸ்​வத் மாரி​முத்​து, மாரி செல்​வ​ராஜ், சக்​திவேல், நித்​திலன் சுவாமி​நாதன் மற்​றும் படக் குழு​வினர் கலந்து கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x