Published : 27 Jun 2025 10:42 PM
Last Updated : 27 Jun 2025 10:42 PM
சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 4 ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லரின் கலர் டோன், இது எப்படியான படம் என்பதை கூறிவிடுகிறது. படு சீரியஸாக செல்லும் ட்ரெய்லர் முழுக்கவே அதிரடி, ஆக்ஷன், ரத்தம், வன்முறை தெறிக்கிறது. சூர்யா சேதுபதி படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக உண்மையிலேயே நிறைய மெனக்கெட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை ட்ரெய்லருக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவின் தரம் பளிச்சென தெரிகிறது. அத்துடன் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் என பிரபல நடிகர் பட்டாளமும் உள்ளது. ட்ரெய்லரில் இருக்கும் விறுவிறுப்பு படத்திலும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT