Last Updated : 27 Jun, 2025 11:58 AM

 

Published : 27 Jun 2025 11:58 AM
Last Updated : 27 Jun 2025 11:58 AM

10 படங்களை அறிவித்துள்ள வேல்ஸ் நிறுவனம்

வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 2025-2027 வரை தயாரிக்கவுள்ள படங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வேல்ஸ் நிறுவனம். இதல் யார் நடிக்கவுள்ளார்கள் என்றெல்லாம் இல்லாமல் எந்த இயக்குநர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்பதை மட்டும் அறிவித்துள்ளார்கள். பல்வேறு முன்னணி இயக்குநர்கள் இப்பட்டியலில் இருப்பதால், அடுத்ததாக திரையுலகில் பெரிய முதலீட்டை வேல்ஸ் நிறுவனம் செய்யவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

இயக்குநர்கள் சுந்தர்.சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே.பாபு ஆகியோரது அடுத்த படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் மட்டுமே தயாரிப்பில் இருக்கிறது. விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குநர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்பாக இருக்கும்.

இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், “இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தை குறிக்கிறது. வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகப்பெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

படங்கள் தயாரிப்பு மட்டுமன்றி விநியோக உள்ளிட்ட முழுமையான பணிகளை மேற்கொள்ளும் ஸ்டூடியோவாகவும் வளர்ந்து வருகிறது வேல்ஸ் நிறுவனம். இதற்காக டிஜிட்டலில் கதைகளுக்கான தனிச்சிறப்பு அணியையும் அணியையும் உருவாக்கி வருகிறது.

மேலும், வேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இண்டோர் ஸ்டுடியோவைக் கட்டி வருகிறது (சென்னையில்) மற்றும் மேலும் பல ஸ்டுடியோக்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் "வேல்ஸ் ஜாலி வுட் "தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ வளாகம் கர்நாடகாவில் செயல்படுகிறது. இது வேல்ஸ் நிறுவனத்தின் புரொடக்‌ஷன் உள்கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.

வேல்ஸ் நிறுவனம் tier-2 மற்றும் tier-3 நகரங்களில் திரையரங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இது விநியோகம் மற்றும் திரையரங்கு காட்சிப்படுத்தலில் முழுக்கட்டுப்பாட்டை வழங்கும். வேல்ஸ் நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்கம், ஓரு வருட காலம் திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலுடனும் வணிக நோக்கிலும் விரிவுபடுத்திய ஒரு செயல்முறையின் உச்சமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x