Last Updated : 26 Jun, 2025 04:34 PM

 

Published : 26 Jun 2025 04:34 PM
Last Updated : 26 Jun 2025 04:34 PM

மோகன்லால் – மம்மூட்டி இணையும் ‘பாட்ரியாட்’?

மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணையும் படத்துக்கு ‘பாட்ரியாட்’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகேஷ் நாராயணன் இயக்கி வரும் புதிய படத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவே மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளா, இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, தற்போது இலங்கை படப்பிடிப்புக்காக மோகன்லால் சென்றிருந்தார். அப்போது இலங்கை சுற்றுலாத் துறை அவரை வரவேற்றது. அதன் புகைப்படங்களோடு ‘பாட்ரியாட்’ படத்தின் படப்பிடிப்புக்காக மோகன்லால் இலங்கை வந்தபோது என்று குறிப்பிட்டு இருந்தது. அதுமட்டுமன்றி சமீபத்தில் மோகன்லால் அளித்த பேட்டியிலும் இப்பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த இரண்டையும் வைத்து பார்த்தால், படத்தின் தலைப்பு ‘பாட்ரியாட்’ என்பது உறுதியாகிறது. இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x