Last Updated : 25 Jun, 2025 04:03 PM

 

Published : 25 Jun 2025 04:03 PM
Last Updated : 25 Jun 2025 04:03 PM

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி அறிமுகம்!

ஹாலிவுட்டில் புதிய படம் ஒன்றின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ‘RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இப்படம் குறித்து வரலட்சுமி கூறும்போது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார். இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம்.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக்கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் தெற்காசிய மற்றும் சர்வதேச சினிமாவுக்கு இடையே ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x